இளம்மாலை சூரியன் நெற்றிசுட கண் விழித்தான் மதன்.முற்பகல்நிகழ்வுகள் மனதில் வர புன்னகைத்துக்கொண்டான்.களைப்பில் பெரியதாய் சோம்பல் முறித்து மிகவும் முயன்று எழுந்து அமர்ந்தான்த.ஏதோ பெரிய விஷயம் ஒன்று சாதித்ததாய் பெருமூசசு விட்டான்.அந்த படுக்கையறை ஒட்டிய குளியலறை கதவு திறந்தது.பனியில் குளித்த ரோஜாவாய் அவள் வெளியே வந்தாள்.அவள் அணிந்திருந்த நீலநிறப்புடவை அவளால் அழகு பெற்றிருந்தது.கண்ணாடி முன் நின்று தலை உலர்த்திக்கொண்டிருந்தவளை கண் கொட்டாமல் பார்த்திருந்தான் மதன்.
‘என்ன அழகுடீ நீ.. இப்படி என்னை கொல்லறியே’மெதுவாய் தான் சொன்னான்.சட்டென்று படுக்கையிலிருந்நு எழுந்து வந்து அவளை பின்னாலிருந்து அணைத்தான்.இதை சற்றும் எதிர்பாராதவளாய் அவன் பிடியிலிருந்து தன்னை விடுவிக்க போராடினாள்.
அவன் கொடுத்த காயங்கள் வலிக்க
“ஸ்ஸ்ஸ ஆ…வலிக்குது விடுங்க”என்று அவனை தள்ளி தன்னை விடுவித்து கொண்டாள்.
வெட்கத்தில் தன்னை தள்ளுவதாய் எண்ணிய அவன் அவளை இழுக்க…அவள் கண்ணில் புரண்ட கண்ணீர் கண்டு அதிர்ந்தான்.
“என்ன ஆச்சு கவி!ஏன்மா?”
நெருங்கி வந்தவனிடமிருந்து சற்று ஒதுங்கி நின்றாள்.
“ஒன்றும் இல்லை.நான் கிளம்பறேன்.மணி ஆகிடுச்சு.அத்தை வெயிட் பண்ணுவாங்க”
“ஒன்றும் இல்லையா…என்ன சொல்ற….எங்க என்னை பாரு”மெல்ல அவள் முகம் ஏந்தி பார்த்தான்.அதிர்ந்தான்.
எப்போதும் அன்று பூத்த பூவாய் இருக்கும் அவள் முகம் வாடியிருந்தது.கண்களில் கண்ணீர் ததும்ப கவலையில் தோய்ந்ததிருநதது.வெகுநேரம் அழுத சுவடுகள் அவள் முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது.
“கவி உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேனா…மன்னிச்சிடு டீ ..உன் மேல உள்ள ஆசையில கொஞ்சம் வெறித்தனமா நடந்துகிட்டேன்…மன்னிச்சிடு..இனி உன்னை மென்மையா கையாளறேன்”
அவன் காதல் மொழியை அவள் இரசிக்கவில்லை.அவனுக்கும் புரிந்தது.
“சரி நான் கிளம்பறேன்.”
“என்ன அவசரம் இப்போ?”
“அத்தை எனக்காக காத்திருப்பாங்க.கடைக்கு போகனும்.எனக்கு முகூர்த்த புடவை வாங்க”
அவசரமாக தன் உடமைகளை எடுத்து பையில் அடைத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானாள்.
“என்ன கவி இப்படி அவசரம்….ஏதாவது கோபமா?”என்றவனை ஒரு முறை பார்த்துவிட்டு தன் வேலையை முடித்துக்கொண்டாள்.
“நான் வரேன .பை”
“கவி !கவி!”அவன் அழைப்பு அவள் காதில் வாங்காமலேயே சென்றாள்.
மேஜை மேல் அவன் தொலைபேசி அலறியது.அதன் அடியில் திருமண அழைப்பிதழ் .ஒரு மாத காலம் கழித்து நடக்கவிருக்கும் திருமணம்.மணமகள் கவிதா என்றிருந்தது.அதையே வெறித்து பார்த்தபடி போனை எடுத்தான்.
“என்னம்மா…சரி சரி புலம்பாதே வரேன்”.
நாட்கள் செல்ல செல்ல மதன் தூக்கம் இழந்தான்.அன்று பை சொல்லி போனவள்.மறுமுறை சந்திக்கவும் வரமாட்டேன் என்றாள்.அதன்பின் தொலைபேசி இணைப்பையும் துண்டித்தாள்.அவள் கண்ணீரின் காயம் இவனை புரட்டிப்போட்டது.குற்ற உணர்ச்சியில் நொந்து கொண்டிருந்தான்.
அலைபேசியில் அவன் நண்பண்
“டேய் மதன்..ரெடியா டா…”
“எதுக்கா…நாளைக்கு கல்யாணம்…நினைவிருக்கா…?”
“ம்ம்ம்ம்”
“என்னடா ம்ம்ம்ம்…..கவிதா வாவது நினைவிருக்கா”
“டேய் வெறுப்பேத்தாத…அவ என் கூட பேசி ஒரு மாதம் ஆகுது”
“கல்யாணப்பெண் அவங்க எப்படி பேச முடியும்.இனி உன் கிட்ட என்ன பேச இருக்கு”
“அதுவும் சரிதான்”நீண்ட பெருமூச்சுடன் திருமணத்திற்கு தயாரானான்.
திருமணமண்டபம் கோலாகலமாக இருந்தது.உற்றார் உறவினர் நண்பர்கள் என்று அனைவரும் கூடி மகிழ்ந்து களித்துக்கொண்டிருந்தனர்.திருமணம் வெகு விமர்சையாக கொண்டாடுவதே இது போன்ற சந்தோஷங்களுக்காக தானே.குழந்தைகள் குதூகல்த்துடன் பெரியோர் ஆசிகளுடன் பெற்றோர் பூரிப்புடன் கவிதாவின் திருமணம் சிறப்பாய் நடந்தேறியது.வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தனர் புதுமண தம்பதிகள.இதில் ஒரு உள்ளம் மட்டும் சலனப்பட்டுக்கொண்டிருந்தது.மணப்பெண்ணாய் இருக்கும் கவியின் முகம் தாண்டி அன்று கண்ணீரில் நனைந்த கவியின் முகமே அழுத்தமாய் மனதில் பதிந்தது மதனுக்கு.இன்று எப்படியும் விடை பெற வேண்டுமென்று முடிவெடுத்தான்.
பெண்களின் கேலிகளுக்கும் பெரிசுகளின் சீண்டல்களுமாய் கையில் பால் சொம்பு ஏந்தி அன்ன நடை போட்டு பள்ளியறை நுழைந்தாள் கவிதா.ஆசையாய் அவளை நெருங்கி அணைத்து அவள் காதில் இரகசியம் சொன்னான் மதன்.அவள் கணவன்.
“கவி இன்று முதல் இரவு”
“இல்லைங்க இது இரண்டாவது”
அணைத்த கையை விடுவித்து கொண்டான்.
“நம்மோட முதல் இரவு அன்னியர் வீட்டில் நிர்பந்தத்தின் பேரில் அவசர நொடியில் காயங்காய் அறங்கேறியதுங்க.உடல் காயம் மட்டுமல்ல மனத்திலும் காயம்”
திகைத்தான்.
“கவி ஏன் இப்படி பேசற…உனக்கு உடன்பாடில்லாம நடந்தது போல சொல்லற”
வறண்ட சிரிப்பை அவன் மேல் வீசிவிட்டு
“நான் சோர்வா இருக்கேன் .ஓய்வெடுத்துக்கட்டுமா?”
அவனையறியாமல் தலையசைகத்தான்.கவி படுக்கையில் விழுந்த மறுகனம் தூங்கிப்போனாள்.
அவள் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் அவன் அந்த நாளை அசைவு போட்டான்.அழைப்பிதழ் வாங்க வந்தவளை தன் நிர்பந்தத்தின் பெயரில் அவன் நண்பன் வீடு கூட்டிச்சென்றான்.அந்த வீட்டில் யாருமில்லை என்பதே கவியின் முதல் பயம்
“என்னங்க யாருமில்ல”
“கூட்டமா இருந்து கதை பேசவா இங்க கூட்டிட்டு வந்தேன்.நம்ம இரண்டு பேர் மட்டும் இருக்க தான் இந்த ஏற்பாடு.”
“விளையாடாதீங்க…நாம போகலாம்”
“இரு கவி…உன் கிட்ட போன்ல தான் பேச முடியுது.நேரில் வந்தா எவனோ போல எதிர்ல உட்கார்ந்து பேசிட்டு போற….இங்க இப்போ உன் பக்கத்துல உன் மேல கைபோட்டு அணைச்சிகிட்டு…..”
அவன் பேச அவள் சிவந்தாள்
“என்னங்க இது….போங்க”
“இந்த மாதிரி வெட்கம் எல்லாம் கூட்டத்துல அனுபவிக்க முடியுமா”
“இன்னும் ஒரு மாசம் தானே…அப்புறம் உங்க கூடவே தான் இருக்கப்போறேன்”
“அது இருக்கு.இருந்தாலும் இதுல ஒரு கிக் இருக்கு.உன்னை பெண்பார்க்க வந்தபோதே நான் சரண்டர்.”
அவள் சிரித்தாள்.அவன் மேலும் முன்னேறினான்.
“போனமாதம் நாம நகைவாங்க போனது உனக்கு நினைவிருக்கா…அப்போ என்ன நடந்தது நினைவிருக்கா?”
“இப்போ எதுக்கு அதெல்லம் பேசறீங்க”அவள் வெட்கத்தில் தத்தளித்தாள்.
“அன்னைக்கு படியில் விழப்போன உன்னை உன் இடையில் கைப்போட்டு தாங்கினது முதல்….அந்த கூட்டநெரிசல்ல உன்னை உரசி நின்னது முதல்..எதிர்பாராம நீ கொடுத்த முத்தம் முதல் நான் எரிஞ்சிட்டு இருக்கேன் கவி”
“என்னங்க என்னவோ போல பேசறீங்க.நாம கிளம்பலாம் வாங்க”
“இரு கவி.எதுக்கு பயம் நான் தானே….உன் கணவனா வரப்போறவன் தானே…..என் ஆசை உனக்கு புரியலையா.”
“நல்லா புரியுதுங்க…ஆனா இது நேரமில்லை. இது சரியுமில்லை”
“என்ன நேரம் காலம்…ஆசைக்கு அதெல்லாம் இல்லை…..எனக்கு தப்பா தெரியலை…”
“இந்த பேச்சை விடுங்க நாம கிளம்பலாம்”கிளம்ப ஆயத்தமானவளை தடுத்து அவள் கைப்பற்றி இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான்.
மிரண்டுதான் போனாள் அவள்.
“என்னடீ ரொம்ப பேசற…..உன்னை பார்த்த அந்த நேரத்திலிருந்தே நீ என் மனைவி…எல்லா உரிமையும் இருக்கு எனக்கு”
“கண்டிப்பா உங்க மனைவிகிட்ட உங்களுக்கு உரிமை இருக்கு.ஆனா அதுல அவ விருப்பம் முக்கியம் இல்லையா.இப்போ விருப்பம் இல்லை விடுங்க என்னை”
“ஏன் விருப்பம் இல்லை…உன் பட்டிக்காட்டு தனம் காட்டாதே….உன் ஆசை உன் கண்ணுல தெரியுது.அதன்வெளிப்பாடா தான் எனக்கு முத்தம் கூட கொடுத்த…இப்போ இது மட்டும் ஏன் மறுக்கற”
“ஆமாங்க ஆசை இருக்கு.இப்போ சரியில்லை ன்னு தான் சொல்லறேன்….”
அவள் சொல்லி முடிப்பதற்குள் வேகமாய் அரங்கேற்றினான் அவன் ஆசையின் வேள்வியை..அவன் வேகத்தையும் மோகத்தையும் எதிர்கொள்ள முடியாமல் தன்னவன் என்ற ஒரே சமாதானத்தில் தன்னை அவனிடம் ஒப்படைத்தாள்.
அரைதூக்கத்தில் இந்த காட்சிகள்அவன் கண்முன்விரிய...அவன் நெற்றியில் இளம்சூடு..கவியின் இதழாகத்தான் இருக்கும்.மனதில் நினைத்தபடி தூக்த்தில் இருந்தான்.
“உங்க கிட்டநிறைய பேச தான் நினைக்கிறேன்.ஆனா முடியலை.நேற்று உங்க மனம் புண் பட்டிருந்தா மன்னிச்சிடுங்க.என் வாழ்க்கையை என் கணவனோட எப்படி வாழனும்ன்னு கனவுகள் பல வச்சிருந்தேனுங்க.அதுல நம்ம திருமண இரவு எப்படி இருக்கனும்னு பெரிய கனவும் அடக்கம்.என் புது வீட்டில் என் கணவரோட அறையில் எந்த பதட்டம் பயம் குற்ற உணர்ச்சி இல்லாமல் அழகான ஆரம்பமா இருக்க ஆசை பட்டேன்.ஆனால்…….ஒரு பெரிய காயம் ஏற்படுத்திட்டீங்க.அதன் வலி இன்னமும் அடங்கலை.வலி போக்க வழி தெரியல.நீங்க ஏற்படுத்தினது…நீங்க தான் போக்கனும் உங்க அன்பால்.மற்றபடி உங்க மேல நான் உயிராயிருக்கேன்.ஆழமா நேசிக்கிறேன்.”
மறுமுறை அவன் நெறற்றியில் முத்தமட்டு போனாள்.இம்முறை அவள் முத்தம் அவன் உயிர் சுட்டது.கண்ஓரம் பனித்தது.
“ஐ லவ் யூ கவி”முதல்முறை இதை கூறினான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக