சுடு தண்ணீர்
அந்த மௌன இடைவெளி அவனை கிழித்துக் கொண்டிருந்தது.பார்த்து சில மணி நேரமே ஆனபோதிலும்…இது என்னவோ அவன் மனதில் ஒரு சலனம்.
கண்டதும் காதலா இல்லை அவள் அழகின் மேல் மோகமா..அப்படி ஒரு பேரழகி என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அவன் அவளை விட எத்தனையோ அழகிகளை பார்த்தும் இருக்கிறான் பழகியும் இருக்கிறான். திருமணம் என்றால் ஒரு மைல் தூரம் ஓடுபவன் அவன் மாமாவின் குடைச்சல் தாங்காமல் இங்கு வந்தான். வந்தவன் மனம் இப்படி அலைபாயும் என அவன் கனவிலும் நினைக்கவில்லை.
மாநிறம்…கலையான முகம் காந்த கண்கள்…ஒப்பனை இல்லாத முகத்தில் சின்ன பரு…வெள்ளை சிரிப்பு..இயற்கையின கருமையில் அடர்ததியான அளவான கூந்தல்..மூங்கில் தோள்..பூசிய உடம்பு…பெண்மையின் நிறைவு…..முழுவதாய் பார்த்த போதிலும் ஏனோ அருகில் வைத்து பார்க்க வேண்டுமாய் இருந்தது அவனுக்கு. கொஞ்சம் தனியா தான் பேசிட்டு வாங்க என்று சொல்ல..அவளும் சம்மதிக்க வேண்டுமே என்று இருந்தது.
மாடியேறி பால்கனி சென்றான். அவனை பின் தொடர்ந்து அவன் தேவதையும் அவள் தோழியும். இது என்ன அவளை தனியாய் பார்க்க நினைத்தவனுக்கு எரிச்சலாய் வந்தது. அவள் தோழியை பார்த்து கொஞ்சம் சுடுதண்ணி கொண்டு வரீங்களா…நல்லா சூடா…என்றான். அவள் தன் தோழியிடம் பேசிட்டு இருடீ என்றுசொல்ல…நான் என்ன டீ பேசறது என்று தேவதை சிணுங்கினாள். ஏதாவது சமாளி என்று கூறிவிட்டு கீழிறங்கி போனாள்.
சற்றுநேரம் இருவரும் அமைதியாய் இருக்க அந்த இடைவெளி தான் அவனை கொன்றது. மெதுவாய் அவள் அருகில் சென்றான். அவள் ஒரு பெண்ணா இல்லை எல்லோரா சிற்பமா என சற்று கன்னம் தொட்டு பார்த்தான். இந்த ஸ்பரிசம் எதிர்பார்த்தவள் போல கன்னம் சிவந்து முகத்தை கையால் மூடிக்கொண்டாள்.
இதை அவன் அவளின் சம்மதமாகவே எடுத்துக்கொண்டான். மெல்ல அவள் கை விலக்கி ..அவளின் முகத்தை அவளின் சுவாசத்தை அருகில் வாசித்தான். அவள் பிறை நெற்றியில் அரும்பிய வியர்வை முத்துத்துளிகளாய் தெரிந்தது..அவள் சுவாசத்திற்கு சுவாசம் வேண்டுமாய் இருந்தது. இடை இளகி அவள் சேலை ஒரு அங்குளம் கீழிறங்கியது. பாதங்கள் தரையில் படமால் மிதந்தது. இத்தணையும் தன் அருகாமைக்கே என்றுணர்ந்த அவன் அவளின் தவிப்பை இரசிக்கத் தொடங்கினான். சற்று சீண்டவேண்டுமாய் இருந்தது அவனுக்கு. ஒரு கையால் அவள் இடை வளைத்து தன்மேல் அழுத்திக்கொண்டான். தன்னை விடுவித்துக்கொள்ள அவன் மார்பில் கைவைத்தவள் அவனின் குறுகுறு பார்வையால் வெட்கினாள். அவள் தோள் படர்ந்த கூந்தலை மறுகையால் பின்னுக்கு தள்ளினான். அவள் கழுத்தை வளைத்த மல்லி சரத்தை விலக்கினான். காது மடல்களில் சுருண்ட கூந்தலை ஒதுக்குவதாய் அவள்
காதை வருடினான். இந்த சில்மிஷத்தில் சிணுங்கும் அவளை இரசித்தான்.
இந்த அவஸ்தையில் கழுத்தில் வழிந்த ஒற்றை வேர்வை துளியோடு தன் விரலால் விளையாடினான். மூச்சும் முட்டும் அவள் நெளியல்கள்
ரசித்தான். மூடிய அவளின் கண்களில் இதழ் பதித்தான்..அவள் அவன் மேல் சரியத்துவங்க அவள் முகம் பற்றி கன்னத்தில் முத்திரை பதித்தான். கன்னச்சிவப்பு அவள் அங்கம் எல்லாம் பரவியது. ’பிடிச்சிருக்கா’முனுமுனுத்தான்…’ம்ம்ம்’என்றாள்…’அப்ப அப்ப இன்னொன்னு தரட்டுமா’வெட்கினாள்…’பதில் சொல்லு’..’என்னை கேட்டு தான் இப்ப தந்தீங்களா’…’அது கன்னம்..இப்போ…’விரலால் இதழ் வருடினான்…’போங்க’சின னதாய் சிணுங்கினாள்…’நான் ஒன்னு சொல்லட்டுமா…’..’ம்ம்ம்’…’நான் உன்னை கட்டியிருந்தேனே கையை எடுத்து ரொம்ப நேரமாச்சு…’…
இப்போது தான் அவள் மட்டும் அவனை அணைத்து கொண்டிருப்பது புரிந்தது. தள்ளிப்போக இருந்தவளை அவசரமாய் பிடித்திழுத்து அவள் இதழில் தன் இதழ் பதித்தான். அவன் கை அவள் கூந்தல் அளைந்தது. அவனை அவள் கைகள் இறுகப்பற்றிக் கொண்டது. இதழ் வழி பரிமாற்றம் அரங்கேற்றமாகியது…
“ஏ மகா என்ன பண்ற”
குரல கேட்டு திடுக்கிட்டான். எங்கோ உச்சத்தில் மிதந்தவன் திடீரெனத் தரையில் விழ விழித்தான்.
“இவ இப்படி தாங்க. தப்பா நினைக்காதீங்க…நீங்க கேட்ட சுடுதண்ணீ”
“ஏய் மாப்பிள்ளை. ரொம்ப ஜென்டில்மேன் டீ
..இங்க ஒருத்தி பேசிக்கிட்டே இருக்கேன்..அவரு நீ வரியான்னு அந்த பக்கமாவே பாரத்துகிட்டு நிக்கறாரு..நீ லக்கி தான்..”மகா, அவள் தோழி காதில் சொல்வது அவன் காதில் விழுந்தது.அவன் வாயை சுடுதண்ணீர் பதம் பார்த்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக