வெள்ளி, 5 ஜூன், 2026

பச்சய நிழல்

 

வெக்கை வேகும்

வெயிலின் தாக்கம்

தலைத் தலையாய்

உறிஞ்சிச் செல்லும்

கதிரலைகளுக்கு

ஒப்புக் கொடுத்து நிற்கும்

மரங்கள்...

மழைக்கு மட்டும் தானா

அவர்கள் தலையசைப்பு?

வாசல் வழியும்

வெள்ளைச் சூட்டில்

தத்தித்தத்தி வந்தமர்ந்தது

பட்டாம்பூச்சி...

பூவின் சூடென

நம்பியிருக்குமா

வெயிலும் குடிக்க

பழகியிருக்குமா

இறகுகள் சாமரம்

மண்ணுக்கா

சிறு உடல்

வியர்த்திருக்குமா

எண்ணம் கலைத்து

வண்ணம் தொடுத்து

பட்டென பறந்த

பட்டாம்பூச்சிக்கு

தெரிந்தே இருக்கிறது

அங்கு பச்சய நிழலொன்று

காத்திருக்கும் என்று

 

இரம்யாநடராஜன்

கருத்துகள் இல்லை: