வெள்ளி, 5 ஜூன், 2026

நெடும் பயண நினைவுகள்

 

அனலி அணைக்க

அரூப மாயத்

தொடர்களாய்

ஆகாயவெளியில்

அலைகழியும்

 

மண்ணின் குளிர் துரத்த

சிகரத் தேடுதலில்

புலம் பெயரும் தூரம்

 

போட்டிகளின் நடுவில்

மின்னலென

சில சிலிர்ப்புகள்

கூடும்

 

கனத்த தேகத்தின்

அழுத்தச் சலனங்களில்

விட்டுப் பிரியும்

நொடிகளில்தான்

ஒற்றைத் தியானம்

அரங்கேறும்

விடுபட்ட பின்பு

விடுதலையே நிதர்சனம்

 

உள்நோக்கிக் குவிவதோ

வெளி வெடித்துச்

சிதறுதலோ

உயிர்கொண்ட  வரம்

 

கவிதையெனக் கொண்டாடி

கையேந்தும்  மடிகளில்

தாளமிடும்

மழைத்துளிகளில்

அது அது கொண்ட

நெடும் பயண

நினைவுகள்

 

இரம்யாநடராஜன்

 

கருத்துகள் இல்லை: