அவன்:
கட்டழகி உன் அழகை
கரம்பிடித்தவன் தொடுகின்றேன்
களவியின் கரைதொடுகையிலே
கண்ணில் பிசுபிசுப்பும் ஏனடி
அவள்:
அவனுக்குதான் நான் என
அலையலையாய் கனவு பல
அன்னியமாய் உம் தொடுதல்
அனலாய் தான் கொதிககுதய்யா
பூட்டி வைத்த காதலை தான்
புறம் தள்ள முடியாமல்
புதுவரவாய் உம்காதல் அதை
புண்படுத்த இயலாமல்
புதிதாய் தான் ஒரு பயணம்
புதிராய் தான் போகுமய்யா
மனத்தின் பாரமது கண்
மசியில் கரைந்துவர
உம்ம கேள்வி எனை தைக்க
ஊமையாத்தான் விசிம்பியிருக்கேன்
கணவனாய் உனை வரித்தேன்
காதலை தான் தவறவிட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக