புதன், 1 ஜூலை, 2026

யாரவன் தோழி

 

யாரவன்  தோழி


என் இரவுபகலை இமைக்குள் கொண்டவன்

கருப்பட்டி இதழ் அழகன்

மீசை தூரிகையால் இடைவெளியில்

இடைவெளியின்றி மோகக்கவிதை படைப்பவன்

நெஞ்சுக்குழியில் என் பெயரையும்

மார்பு கூட்டில் என்னையும் சுமப்பவன்

தீண்டலில் தீ மூட்டி

அணைப்பில் நீருற்றும் அதிசயம் அவன்

என் கொலுசின் ஓசையை

 மொழிபெய்ர்க்க தெரிந்தவன்ண

நீளும் இரவிலும் நீங்காத உடை அவன்

கட்டிலிறையில் என் மோகத்தையும்

மற்ற அறையில் என் நோக்கத்தையும்

மொத்தத்தில் என்னையும் சரியாக அளந்தவன்

 நெறியாக அறிந்தவன்

பட்டியல் நீளுமடி சுருங்கச்சொல்கிறேன்

எண்ணம் நிறைந்து உயிரில் இழைந்தவன்

என்னுள உறையும் அவ்வுயிரின் துடிப்பு அவன்.

கருத்துகள் இல்லை: