இசை
இளையராஜா
இந்த இரண்டு
‘இ’ னாக்கள் ஒத்திசைக்கும் போது உயிரும் ஆன்மாவும் எங்கோ மிதந்துவிட்டு
வருவது வழக்கம் தான்.
ஒரு பாட்டு இரண்டு பாட்டு
என்று சொல்லவே முடியாத படி ஒவ்வொரு பாட்டிலும் ஒரு அதிசயம். இசையை பிரித்துப்பிரித்துப் படிக்கத் தூண்டும்
அற்புதம்.
பல பாடல்களை
ஏழு எட்டு முறை தொடர்ந்து கேட்டது உண்டு. “நாங்கலாம்
இருபது முறை.. ஏன் நாள் முழுதும் கூட கேட்டிருக்கோம்னு” என்று சொல்பவர்கள் நிறைய உண்டு.
ஒவ்வொரு
முறையும் அந்த ‘கிக்’ மாறாமல் இருப்பது தான் அந்த ராஜா என்ற ராட்சசனின் மாயம்.
காதல் ஓவியம்
திரைப்படத்தில், நாதன் என் ஜீவனே இந்தப் பாடலின் தொடக்கத்தில்
சலங்கையோடு
ஜதி விழும்
தா நம் தம்த…
நேராக பாட்டுக்குள்
சென்றாலே செத்தோம்.
இதில் ஆலாபனை கோர்த்து
பின்னர் ஒரு மௌனம் கொடுத்து..அடுத்து அப்படியே ஜானுவின் குரலில்
நாதன் என்
ஜீவனே
என்று இழுக்கும்
போது தான் புரியும் அது ஆலபனை அல்ல ராசாவின் ஆவியிழுத்து மிதக்கவிடும் சுருக்குக்கயிறு
என்று.
அங்கயே ஆளு
காலி.
அடுத்து
புல்லாங்குழலில் ஒரு அழைப்பு..
வா வா என்
தேவனே..
அவரவருக்கு
அவரவர் தேவன் காட்சியளிப்பார் இங்கு.
அடுத்து
சலங்கை, தபளா சேர்ந்து ஒரு ஹிந்துஸ்தானி ராகத்தில்
நகர்ந்து கொண்டிருக்கும் போது அதனுடன் கிடார் கீபோர்ட் வைத்து ஜலதரங்கம் போல ஒரு இசை….சிலிர்க்கும் சில்மிஷம் அது..
நாதம் என்
ஜீவனே..
வா வா என்
தேவனே
உந்தன் ராஜராகம்
கேட்கும் நேரம்
பாலை பாலூறுதே
அந்த ஊற்றை
நமக்கு கடத்த தான் அந்த ஜலதரங்கம் இசை போலிருக்கிறது.
இடையிசை...
ராஜாவின்
ரசிகர்களுக்கு அங்க தான் பெரிய விருந்தே காத்து கிடக்கும். நிச்சயமாக ஏகபோகம் தான்.
இந்தப் பாடலில்
ஹிந்துஸ்தானியில் இருந்து அப்படியே நம் இசைக்கு வந்து நிற்பார், புல்லாங்குழலும் கஞ்சிராவும் மிருதங்கமும்
சூழ.
கனவும் கற்பனையும்
சந்தோஷமும் சோகமும் என்றதொரு கலவை தான் இந்தப் பாடல். இசையும் நடனமும் கவிதையும் காதலும் கலந்த ஒரு ஓவியம். இதை இந்த பாட்டில் அப்படியாகவே உணர முடியும்.
முதல் இடையிசையில்
சாரங்கி சுண்டியிழுக்கும்.
சாரங்கி மனித
குரலுக்கு ஒத்திசைக்கும் கருவி என்று சொல்வதுண்டு. அதன் இசையில் ஒரு உருக்கம் ஏற்படுவதற்கு மனம் சாட்சி.
அந்த சாரங்கி
தரும் இசை மனதை உருட்டி பிரட்டி மகுடி போல இழுக்கும். கூடவே அந்த சலங்கை ஒலியும் சேர்ந்து கிறக்கம் தரும். இந்த இடையிசை முடியும் இடத்தில் சாரங்கியும் புல்லாங்குழலும்
காதல் பரிமாற்றம் பண்ணும் போது…வார்த்தைகளற்று காதையும் மனதையும்
கொடுக்க வேண்டியது தான்.
முதல் சரணத்தில்,
அமுத கானம்
நீ தரும் நேரம்
நதிகள் ஜதிகள்
பாடுமே..
நதிகளை ஜதிகள்
பாட வைத்திருப்பார் ராஜா….கிணுகிணு என்று…
இசை மட்டும்
அந்த வரிகளும் தான் பேரழகு.
கண்களில்
மௌனமோ…கோவில் தீபமே
ராகங்கள்
பாடி வா..பன்னீர் மேகமே
மார்மீது
பூவாகி விழவா
விழியாஆஆஆஆஆகி
விடவா
ஜானகியம்மா
‘விழியாகி’ யில் அப்படி ஏறி இறங்கும் போது ஒரு மயக்கமும் காதலும் ததும்பி
மூழ்கடிக்கும்.
இந்த முறை
பல்லவி வரும்போது..
நாதம் என்
ஜீவனே
ஜானகி அம்மா
குரலுடன் சாரங்கி ஒலிக்கும். உயிர் இழுத்து பிடிப்பது போன்ற உணர்வு தரும்.
வா வா என்
தேவனே
இந்த இடத்தில்
மனது தானாக அந்த சாரங்கி எதிர்பார்க்கும்
போது அந்த சிலிர்ப்பை மறுக்காமல் தந்திருப்பார் ராசா.
அடுத்த இடையிசையில்
நம் இசையே.
புல்லாங்குழல்… சேதி என்னவோ சொல்லும். அது மாறும் போது ஒரு சொல்லோ வந்து கிடாரும்
புல்லங்குழலும் டூயட் பாடும்.
பல நேரங்களில்
நினைப்பதுண்டு இந்த புல்லாங்குழலும் கிடாரும் ராசாவின் இடை பிங்களை நாடிகளோ என்று.
அடுத்த சரணத்தில்.
இசையை அருந்தும்
சாதக பறவை போல நானும் வாழ்கிறேன்
இந்த வரிகள்
வருவதற்கு முன்பு அந்த பறவையின் குரலை இசையாக்கி இருப்பார். அந்த வரிக்கு அடுத்தும் புல்லாங்குழலில் அதன்
குரல் எழும்.
அந்த இசை
‘அப்படியே அப்படியே வாழ்கிறாள்’ என்று பறவை தன் குரலில் சாய்சியாகிறது.
ஜானகி அம்மாவினுடைய
அந்த தேன் குரலில் விழும் சங்கதிகளும் உணர்வுகளும் இந்த பாடலை உச்சத்தில் தூக்கி நிறுத்துகிறது
என்றே சொல்ல வேண்டும்.
வெந்நீரில்
நீராடும் கமலம்
விலகாது
விரகம்…..
வரிகளின்
முடிவில் சிறு மௌனம்…
நாதம் என்
ஜீவனே..
இந்த இடத்தில்
பீட் மாறுகிறது.
சாரங்கியுடன்
மிருதங்கமும் தபளாவும் ஒத்திசையும் போது ஒரு மேஜிக் நடக்கிறது.
பந்தியில
பாயசம் வார்ததது போல..
ஆரம்பத்தில்
போட்ட சுருக்குக்கயிற்றை விலக்கிவிட்டது போல ஜானுவின் குரலில்
நாதம் என்
ஜீவனே…..
என்று பாடல்
மௌனமாகும். உயிரும் ஆன்மாவும் தரையிறங்கும். ஆசுவாசமும் ஆனந்தமும் எனப் பேரரருவியின் வீழ்ச்சியாக
நம்மதி கொள்ளும்.
இதோ இன்று
பத்தாவது முறை கயிறு
வந்திறங்குகிறது
நாதம் என்
ஜீவனே…
இரம்யாநடராஜன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக